திண்டுக்கல்லில் நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பஸ் பயணிகள் அவதி

திண்டுக்கல்லில் நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதி அடைந்தனர்.

Update: 2021-10-23 13:32 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து வேடசந்தூருக்கு தினமும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் ‘மகளிர் பயணம் கட்டணம் இல்லை’ என்ற அறிவிப்பு ஒட்டப்பட்ட அரசு பஸ் ஒன்று நேற்று திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து வேடசந்தூருக்கு புறப்பட்டது. அதில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பலர் பயணம் செய்தனர். பழனி சாலையில் அரசு மருத்துவமனை அருகே பஸ் சென்ற போது திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றது. டிரைவர் பஸ்சை மீண்டும் இயக்க எவ்வளவோ முயன்றார். ஆனால் முடியவில்லை. சுமார் அரை மணி நேரம் பஸ் அங்கு நின்றது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து கழக பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பணிமனை ஊழியர்கள் மீட்பு வாகனத்துடன் அங்கு வந்து பழுதாகி நின்ற பஸ்சை பணிமனைக்கு எடுத்துச்சென்றனர். அதன் பின்னரே அப்பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது. முன்னதாக பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ்சில் வேடசந்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்