தேயிலை தோட்டத்தில் ஆட்டோ கவிழ்ந்தது
தேயிலை தோட்டத்தில் ஆட்டோ கவிழ்ந்தது;
பந்தலூர்
பந்தலூர் அருகே நெல்லியாளம் அரசு தேயிலை தோட்ட பகுதியில் இருந்து படச்சேரி நோக்கி ஒரு ஆட்டோ சென்றது. கொளப்பள்ளி அருகே தாழ்வான பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் கவிந்தது. இதனால் ஆட்டோவில் இருந்த படச்சேரியை சேர்ந்த சிலம்பரசன்(வயது 14), சரண்(8), ஜெயராமன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆட்டோ டிரைவர் லேசான காயத்துடன் தப்பினார். இந்த விபத்து குறித்து சேரம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.