பந்தலூர்
பந்தலூர், சேரங்கோடு, படச்சேரி, சேரம்பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களில் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகின்றன. மேலும் பொதுமக்களின் குடியிருப்புகளையும் தாக்கி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் குட்டியுடன் 2 காட்டுயானைகள் பந்தலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் காப்பிக்காடு பகுதியில் உலா வந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சேரம்பாடி வனத்துறையினர் கூச்சலிட்டு காட்டுயானைகளை விரட்டியடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.