இறால் தொழிற்சாலையை கண்டித்து தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே தனியாருக்கு சொந்தமான இறால் தொழிற்சாலையை கண்டித்து தாசில்தார் அலுவலகம் முன்பு பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-23 03:54 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான 14 ஏக்கர் நிலப்பரப்பில் இறால் பண்ணை மற்றும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொழிற்சாலை அமைந்தால் சுற்றுப்புற கிராம மக்களின் குடிநீர், விவசாயம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கும் என புகார் கூறி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 70 பேர் நேற்று கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தங்களது கோரிக்கை தொடர்பாக தாசில்தார் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்து விட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்