அரியலூர்:
அரியலூர் நகரில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று வரை சுமார் 35 சென்டி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. மழையால் நகரில் உள்ள அனைத்து ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வழிகின்றன. ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள வண்ணான்குட்டை மட்டும் நிரம்பவில்லை. குட்டையை சுற்றிலும் உள்ள சாலைகளை உயர்த்தியபோது மழை வரும் வாய்க்கால்கள் அடைக்கப்பட்டு விட்டன. இதனால் அந்த குட்டையில் பெய்யும் மழை நீர் மட்டுமே சிறிதளவு தேங்குகிறது. நகரில் அனைத்து வீடுகளிலும் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்காக பொருட்களை வாங்க வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்களும், கடை வைத்திருக்கும் வியாபாரிகளும், மழையால் பாதிக்கப்படுகின்றனர்.