ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி பட்டு வஸ்திரம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி பட்டு வஸ்திரம்
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்தின்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் கிளி ஆகியவை திருப்பதி ஏழுமலையான் அணிந்து கொள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் கொண்டு செல்லப்படும். ஆண்டாள் சூடிய அந்த மாலையை புரட்டாசி பிரம்மோற்சவ 5-ம் நாளன்று திருப்பதியில் சீனிவாசப்பெருமாள் அணிந்து கொள்வார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலையை கொண்டு சென்றதற்கு, திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு, ஏழுமலையான் அணிந்திருந்த பட்டு வஸ்திரம் மற்றும் 2 வெண்குடைகளை ஆண்டாள் கோவில் நிர்வாகத்தினரிடம் கொடுத்து அனுப்புவார்கள். அந்த பட்டு வஸ்திரம் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்தது. அந்த பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு ஆண்டாள் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.