கே.வி.குப்பம் அருகே திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் இளம்பெண் தற்கொலை

திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் இளம்பெண் தற்கொலை;

Update: 2021-10-22 18:00 GMT
கே.வி.குப்பம்

கே.வி.குப்பத்தை அடுத்த மேல்கிருஷ்ணாபரம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் சுதி (வயது19). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு கல்லூரி செல்ல ஆர்வமுடன் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரை  படிக்கவைக்க வசதி இல்லாததால், அவருக்கு திருமண ஏற்பாடு நடைபெற்றதாக தெரிகிறது. 

இதை அறிந்த சுதி மனம் உடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து உறவினர் கொடுத்த புகாரின்பேரில் கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்