போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்,
தூத்துக்குடி கீழக்கரந்தைைய சேர்ந்த சங்கர் மகன் தினகரன் (வயது27). இவர் 17 வயது சிறுமியுடன் பழகி ஆசை வார்த்தை கூறி கோவைக்கு அழைத்து சென்று திருமணம் செய்து பாலியல் மீறலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இது தொடர்பாக உலகம்பட்டி மகளிர் நல அலுவலர் சக்தி திருப் பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தினகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.