மழையில் நனைந்த நெல்மணிகளை உலர வைக்கும் பணியில் விவசாயிகள்
கூத்தாநல்லூர் பகுதியில் மழையில் நனைந்த நெல்மணிகளை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.;
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் பகுதியில் மழையில் நனைந்த நெல்மணிகளை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
குறுவை அறுவடை பணிகள்
கூத்தாநல்லூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் அறுவடை நேரத்தில் கடந்த 2 நாட்களாக கூத்தாநல்லூர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை சாலைகளில் கொட்டி அதனை தார்ப்பாய் கொண்டு விவசாயிகள் மூடி வைத்தனர். ஆனாலும் அறுவடை செய்யப்பட்டபோது மழை பெய்ததால் நெல்களில் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது.
உலர வைக்கும் பணி
மேலும் மழை அதிகளவில் பெய்ததால் சாலைகளில் கொட்டி தார்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்ட நெல்மணிகள் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை தண்ணீரில் நனைந்துள்ளது. இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல்லில் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று காலையில் மழையில் நனைந்த நெல்மணிகளையும், மூடி வைக்கப்பட்ட ஈரப்பதம் அடைந்த நெல்களையும் சாலைகளிலேயே உலர வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் மழையில் நனைந்ததால் கூத்தாநல்லூர் பகுதிகளில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்தனர்.