தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்துள்ள செய்திகள் வருமாறு:-

Update: 2021-10-22 16:19 GMT
மின் விளக்கு வசதி வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி உப்பனாறு பாலத்தில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில்  இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர்.நடந்து செல்லும் பெண்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.மேலும் சாலை வளைவு மிக குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உப்பனாறு பாலத்தில்  மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
  
                              -பொது மக்கள், தரங்கம்பாடி.
 
அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா?
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் பொறையாறு வருவாய் கிராமம் ராஜீவ்புரத்தில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்யம் மயான கொட்டகை இல்லை. மேலும் ஈமக்கிரியை செய்யும் மண்டபமும் இல்லை தெருவிளக்கு வசதி, தண்ணீர் வசதி போன்ற எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்..
                              -கிராம மக்கள், ராஜீவ்புரம்.

மேலும் செய்திகள்