ஆறுமுகநேரியில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
ஆறுமுகநேரியில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பெரியான்விளை பகுதியை சேர்ந்த ஆசீர்வாதம் மகன் கணேசன் (வயது 36). கூலி தொழிலாளி. இவரது மனைவி அனிதா. குழந்தைகள் இல்லை. கணேசன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக செய்து வந்துள்ளார்.
இதனால் பல மாதங்களுக்கு முன்பு மனைவி கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இவர் தனிமையில் வசித்து வந்துள்ளார். பக்கத்தில் தாய் சரஸ்வதி வசித்து வந்ததால் அவரது வீட்டில் போய் சாப்பிடுவது வழக்கம். மேலும், தாயிடமும் மதுகுடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி இரவு தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்துவிட்டு தனது வீட்டுக்கு சென்று விட்டாராம். 2 நாட்களாகியும் கணேசனை காணவில்லையாம். இந்த நிலையில் அவரது வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் கூறியதால் பதறிப்போன தாய் அந்த வீட்டைத் திறந்து பார்த்துள்ளார். ்அங்கு கணேசன் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.
இதுகுறித்து அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.