நல்லூர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா பெரியலூர் ஜமீன் பகுதியை சேர்ந்த குமார் மகன் தங்கபாண்டியன் வயது 26. இவர் திருப்பூர் பள்ளக்காட்டுபுதூர் வடக்கு வீதியில் வசித்து வரும் தனது அக்காள் வீட்டில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் சொந்த ஊருக்கு சென்ற அவர் நேற்று காலை வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் இருந்த அனைவரும் வெளியில் சென்ற நேரத்தில் காலை 10 மணியளவில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.