காவலர் நினைவுத்தூணுக்கு போலீசார் மரியாதை

தென்காசி அருகே காவலர் வீரவணக்க நாளையொட்டி நினைவு தூணுக்கு போலீசார் மரியாதை செலுத்தினர்.

Update: 2021-10-22 00:37 GMT
தென்காசி:
பணியின்போது இறந்த போலீசாரின் நினைவை போற்றும் வகையில் நேற்று காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் இருந்து புதிதாக பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் போலீசாரின் நினைவை போற்றும் வகையில், தென்காசி அருகே ஆய்க்குடி போலீஸ் நிலைய வளாகத்தில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டது.

காவலர் வீரவணக்க தினத்தை முன்னிட்டு, நேற்று அந்த நினைவுத்தூணுக்கு முதல்முறையாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அங்கு அணிவகுத்து நின்ற போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு 60 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர். 

கடந்த 2-6-2021 அன்று கொரோனாவால் இறந்த புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன், கடந்த 7-1-2010 அன்று ஆள்மாறாட்டத்தால் கொலை செய்யப்பட்ட வீரவநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ஆகியோரின் குடும்பத்தினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கலிவரதன், ராஜேந்திரன், சுவாமிநாதன், துணை சூப்பிரண்டுகள் சிசில், மணிமாறன், பொன்னிவளவன், கணேஷ், ஜாகீர் உசேன், சூரியமூர்த்தி, பயிற்சி துணை சூப்பிரண்டுகள் சரண்யா, நித்யா, இன்ஸ்பெக்டர்கள் வேல்கனி, தாமரை விஷ்ணு, பிரபு மற்றும் போலீசார் கலந்து கொண்டு நினைவுத்தூணுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்