புகாா் பெட்டி

புகாா் பெட்டி

Update: 2021-10-21 21:58 GMT
குண்டும் குழியுமான பாதை 
பவானி அருகே ெபருந்தலையூர் கிராமத்தில் இருந்து மேற்கு குட்டிபாளையத்தில் உள்ள ஆற்றுக்கு  பாதை செல்கிறது. சமீபத்தில் பெய்த மழையால் இந்த பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் பாதை குண்டு்ம் குழியுமாக காணப்படுவதால் அந்த வழியாக நடந்தோ, வாகனங்களில் செல்லவோ முடியவில்லை. சுடுகாட்டு்க்கும் அந்த வழியாக தான் செல்ல வேண்டியது உள்ளது. எனவே உடனே அந்த பாதையை சீரமைக்க சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஊர்ப்பொதுமக்கள், குட்டிபாளையம்

குடிநீர் வேண்டும்
கொடுமுடி ஊராட்சிக்கு உள்பட்டது எழுநூற்றுமங்களம் ஊராட்சி. இங்குள்ள மக்கள் குடிநீர் உபயோகத்திற்காக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த தொட்டியில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மின்மோட்டார் பழுதானதால் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவது நிறுத்தப்பட்டது. எனவே ஊராட்சி நிர்வாகம் மின்மோட்டார் பழுதை சரிசெய்து தொட்டியில் தண்ணீர் ஏற்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரவணன், கொடுமுடி

சாக்கடை வடிகால் வசதி
டி.என்.பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட அக்கரைக்கொடிவேரி ஊராட்சியில் உள்ளது சிங்கிரிபாளையம் கிராமம். இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாக்கடை வடிகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் மழை பெய்யும்போது விநாயகர் கோவில் வீதியில் இருந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வரையிலான சாக்கடை கால்வாயில் தண்ணீர் நிரம்பி ரோட்டில் ஓடுகிறது. சில நேரம் பள்ளிக்கூடத்துக்குள்ளும் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் அவதிப்பட்டு வருகிறோம். எனவே உடனே கால்வாய் அமைக்கும் பணியை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோகுல், சிங்கிரிபாளையம்

பாராட்டு 
ஈரோடு நேதாஜி நகர் பெரியவலசு 5-வது வீதியில் கான்கிரீட் காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் மின்கம்பம் காணப்பட்டது. இந்த மின்கம்பத்தை உடனே மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி தினத்தந்தி நாளிதழில் புகார் பெட்டியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பழுதடைந்த மின்கம்பம் அகற்றப்பட்டு் அந்த இடத்தில் புதிதாக வேறு மின்கம்பம் நடப்பட்டுள்ளது. எனவே செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரியவலசு.

மேலும் செய்திகள்