மாட்டுவண்டிகளில் மணல் கடத்திய 5 பேர் கைது

மாட்டுவண்டிகளில் மணல் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-10-21 19:22 GMT
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே ஆளப்பிறந்தான் வெள்ளாற்று பகுதியில் அறந்தாங்கி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மாட்டுவண்டிகளில் மணல் கடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த கூத்தையா (வயது 60), ரவிச்சந்திரன் (56) ஆகிய 2 பேரையும் கைது செய்து மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் லெட்சுமியேந்தல் வெள்ளாற்று பகுதியில் நாகுடி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மாட்டுவண்டியில் மணல் கடத்திய பாண்டிபத்திரம் பகுதியை சேர்ந்த ராம்கி (31), சூர்யா (22), விஜய் (24), ஆகிய 3 பேரையும் கைது செய்து, மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்