ராகிங் செய்த மாணவன் மீது வழக்கு
ராகிங் செய்த மாணவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை 2-ம் ஆண்டு படிக்கும் மாணவன் அமுதன் (வயது 22) அதே கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவனை ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவன் அரும்பாவூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.