கன்னியகோவிலில் டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய லாரி

கன்னியகோவிலில் டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய லாரி தடுப்பு கட்டையில் மோதி நின்றது.;

Update: 2021-10-21 18:48 GMT
பாகூர், அக்.22-
 கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த தெம்மூர் திடல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35). லாரி டிரைவர். திண்டிவனம் பகுதியில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு சிதம்பரம் சென்று கொண்டிருந்தார். புதுச்சேரி- கடலூர் ரோட்டில் கன்னியகோவில் அருகே சென்றபோது லாரியின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே உள்ள தடுப்புக் கட்டையில் மோதி நின்றது. இதில் லாரியின் ஆயில் டேங்க் உடைந்து சாலையில்   ஆறாக ஓடியது. இதுகுறித்து  தகவல்  அறிந்து   வந்த   கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்