ஓசூரில், காதல் தோல்வியால் தனியார் நிறுவன அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை
காதல் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த தனியார் நிறுவன அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஓசூரில் நடந்துள்ளது.
ஓசூர்:
காதல் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த தனியார் நிறுவன அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஓசூரில் நடந்துள்ளது.
தனியார் நிறுவன அதிகாரி
தெலுங்கானா மாநிலம் தரூர் மாண்டல் மாவட்டம் நாகசமுதூரை சேர்ந்தவர் அப்பையா. இவருடைய மகன் குருமூர்த்தி (வயது 29). இவர் ஓசூரில் ஆவலப்பள்ளி அட்கோவில் தங்கி, தனியார் நிறுவனம் ஒன்றில் துணை மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
குருமூர்த்தி தனது முறை பெண்ணான அத்தை மகளை காதலித்து வந்தார். இந்த காதலை அவர் தனது முறைப்பெண்ணிடம் தெரிவித்தார். ஆனால் அவரோ குருமூர்த்தியின் காதலை ஏற்க மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட குருமூர்த்தி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
இது குறித்து ஆவலப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் மாயகிருஷ்ணன் ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.