வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் சரிபார்ப்பு

கள்ளக்குறிச்சி்யில் வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டது.

Update: 2021-10-21 17:58 GMT
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி அருகே தச்சூரில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 தேர்தலின் போது பயன்படுத்தாமல் இருப்பு வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவி, வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த  அறையை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. பின்னர் அந்த எந்திரங்களை கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து அவர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வரப்பெற்ற வாக்குப்பதிவு எந்திரங்களில் தேர்தலில் பயன்படுத்தப்படாமல் இருப்பில் வைத்துள்ள 420 வாக்குப்பதிவு எந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகள், 530 வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் ஆகியவற்றை  உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு தேர்தலுக்காக அனுப்பி வைக்கப் படவுள்ளது.  இதற்காக எந்திரங்கள், இ.எம்.எஸ். மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது. இந்த பணி முடிந்ததும் எந்திரங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார். அப்போது தேர்தல் தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர். 



மேலும் செய்திகள்