நள்ளிரவில் செல்போன்களை திருடும் மர்ம நபர்கள்
நள்ளிரவில் செல்போன்களை திருடும் மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி பகுதியில் உள்ள மேலத்தெரு, சந்திவீரன் கூடம், செட்டியார் குளம், வடக்கு தெரு, வேளார் தெரு, முழு வீரன் தெரு, கீழக் காட்டு சாலை போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் காற்றோட்டத்திற்காக ஒரு சில வீடுகளில் கதவை திறந்து வைத்து பொதுமக்கள் தூங்குகின்றனர். இதை நோட்டமிடும் மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து வீட்டில் உள்ள செல்போனை மட்டும் திருடிக் கொண்டு செல்கிறார்கள். இதுவரை சுமார் 30-க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே போலீசார் இரவில் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும். மர்ம நபர்களை கைது செய்யவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.