மேலும் 73 பேருக்கு கொரோனா

மேலும் 73 பேருக்கு கொரோனா;

Update:2021-10-21 21:19 IST
திருப்பூர்
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 669ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 79 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 889க உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 808 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 972ஆக உள்ளது. 

மேலும் செய்திகள்