ராணிப்பேட்டையில் பணியின்போது உயிர்நீத்த போலீசாருக்கு அஞ்சலி

பணியின்போது உயிர் நீத்த போலீசாருக்கு வீர வணக்க நாளை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Update: 2021-10-21 15:29 GMT
ராணிப்பேட்டை

பணியின்போது உயிர் நீத்த போலீசாருக்கு வீர வணக்க நாளை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

வீரவணக்க நாள்

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி பணியின்போது மரணமடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் வீர வணக்க நாளாக நாடு முழுவதும் கடைபிடிக்க படுகிறது. அதன்படி ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நேற்று வீரவணக்கநாள் நடந்தது.

இந்த ஆண்டு பணியின் போது நாடு முழுவதும் உயிர் நீத்த 377 போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேசன், ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முகேஷ் உள்ளிட்ட போலீசாரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த போலீசாரின் குடும்பத்தினரும், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

துப்பாக்கி குண்டுகள்

பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக துப்பாக்கி குண்டுகள் முழங்கப்பட்டது. இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். வீர வணக்க நாளை முன்னிட்டு போலீசார் கருப்பு பட்டை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்