ஊட்டி
பணியின்போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி ஊட்டி ஆயுதப்படை வளாகத்தில் வீர மரணமடைந்த காவலர்களின் நினைவு தூணுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் தலைமை தாங்கி நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் முத்துமாணிக்கம், மோகன் நவாஸ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மகேஸ்வரன், சுரேஷ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பணியின் போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் நாடு முழுவதும் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டது.