வாணியம்பாடி அருகே கோவில் உண்டியலை திருடிய 2 பேர் கைது

கோவில் உண்டியலை திருடிய 2 பேர் கைது

Update: 2021-10-21 13:38 GMT
வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் மர்ம நபர்கள் 2 பேர் நேற்று முன்தினம் நள்ளிரவு கோவில் உண்டியலை உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு கிராம மக்கள் அங்கு வந்தனர். அவர்களை பார்த்ததும் 2 கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களில் ஒருவரைபொதுமக்கள் விரட்டி சென்று பிடித்து வாணியம்பாடி தாலுகா போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பிடிபட்ட நபர் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (வயது 21) என்பது தெரியவந்தது. அவவை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் தப்பி ஓடிய  மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பாலு (23) என்பவரையும் கைது செய்தனர். அவர்கள் திருடிச்சென்ற உண்டியலை கைப்பற்றி கிராம மக்களிடம் ஒப்படைத்தனர். கைதுசெய்யப்பட்ட இருவரும் வாணியம்பாடி குற்றவியல் நீதித்துறை நடுவர் காளிமுத்துவேல் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்