குலசேகரன்பட்டினம் அருகே விபத்தில் காயமடைந்த கொத்தனார் சாவு
குலசேகரன்பட்டினம் அருகே நடந்த விபத்தில் காயமடைந்த கொத்தனார் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்
குலசேகரன்பட்டினம்:
கன்னியாகுமரி மாவட்டம் பொட்டல் கீழகுஞ்சன்விளையைச் சேர்ந்த சுடலைமணி மகன் சுரேஷ் (வயது 27). இவர் குலசேகரன்பட்டினம் காவடிபிறை தெருவில் தங்கியிருந்து கொத்தனார் வேலை செய்து வந்தார். கடந்த 16-ந் தேதி இரவு தனது நண்பர் சின்னத்துரை மகன் வெற்றிவேல் என்பவருடன் மோட்டார் ைசக்கிளில் திருச்செந்தூர்-மணப்பாடு ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
குலசேகரன்பட்டினம் தருவை பாலம் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் வந்து இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சுரேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் சாத்தான்குளத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.