பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி கலெக்டரிடம் மனு

கோட்டைகருங்குளம் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2021-10-20 21:38 GMT
நெல்லை:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் யூனியனுக்கு உட்பட்ட கோட்டைகருங்குளம் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட்ட குமார் தலைமையில் ஏராளமானவர்கள் ேநற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், கோட்டைகருங்குளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை தெற்குகள்ளிகுளத்தில் நடந்தது. அப்போது வாக்குப்பெட்டிகளை எங்கள் முன்னிலையில் பிரிக்கப்படவில்லை. அதில் பல முறைகேடுகள் நடந்துள்ளது. எனவே அங்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கதுரை. இவருடைய மனைவி தாமரைக்கனி. இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்து இறந்து விட்டது. அந்த குழந்தை இறந்ததற்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்களின் கவனக்குறைவு தான் காரணம், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கலெக்டர் அலுவலகத்தில் தாமரைக்கனி மனு கொடுத்தார். 

மேலும் செய்திகள்