டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது
டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
பனவடலிசத்திரம்:
தேவர்குளம் அருகே உள்ள மேலஇலந்தைகுளம் பகுதியில் தேவர்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி மைனர்ராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மேல இலந்தைகுளத்தை சேர்ந்த யாகப்பராஜ் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர். டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.