திருச்சி ரெயில் நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
தீபாவளி பண்டிகை எதிரொலியாக திருச்சி ரெயில் நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திருச்சி, அக்.21-
தீபாவளி பண்டிகை எதிரொலியாக திருச்சி ரெயில் நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. வருகிற 1-ந்தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதன் காரணமாகவும், தீபாவளி பண்டிகை எதிரொலியாகவும் திருச்சி ரெயில் நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் (செப்டம்பர்) தினமும் சராசரியாக 19 ஆயிரம் என்ற அளவில் பயணிகளின் எண்ணிக்கை இருந்தது. இந்த மாதம் பயணிகளின் எண்ணிக்கை 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட முந்தைய காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கு மேல் இருந்தது,
பள்ளிகள் திறப்பு மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு ரெயில்வேயை பொருத்த வரை, கொரோனா தொற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 95 சதவீத ரெயில்கள் இப்போது இயக்கப்பட்டு வருகின்றன.
சிறப்பு ரெயில்கள்
தீபாவளியையொட்டி சென்னை-சந்திரகச்சி, சென்னை-கோவை, சென்னை எழும்பூர்- நாகர்கோவில் உள்ளிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தேவையின் அடிப்படையில் மேலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். ரெயில் நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, கொரோனா தடுப்பு கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூட்டத்தை கட்டுப்படுத்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், டிக்கெட் முன்பதிவுக்காக கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கப்படவுள்ளன.
திருச்சி ரெயில்வே கோட்டத்தை பொருத்த வரை, கடந்த 2 வாரங்களாக டிக்கெட் முன்பதிவு மூலமாக கிடைக்கும் வருவாய் அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை ரூ.10 கோடியே 46 லட்சம் வருவாய் கிடைத்த நிலையில், 15-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ரூ.11 கோடியே 46 லட்சம் அதிகரித்தது. இந்த மாதம் 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை ரூ.12 கோடியே 10 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.