ரிஷிவந்தியம் திருக்கோவிலூர் முகையூர் மற்றும் சங்கராபுரம் ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
ரிஷிவந்தியம் திருக்கோவிலூர் முகையூர் மற்றும் சங்கராபுரம் ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற வார்டு கவுன்சிலர்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் ஒன்றியம்
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர் சார்லஸ் கென்னடி வெற்றிபெற்ற அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் 1-வது வார்டு கவுன்சிலர் உமா மகேஸ்வரிபாரதிதாசன் முதலில் பதவிபிரமாணம் எடுத்துக்கொண்டார்.
இவரை தொடர்ந்து 2-வது வார்டு இளங்கோ முத்துவீரன், 3-வது வார்டு ராஜேஸ்வரி ஏழுமலை, 4-வது வார்டு பரிமளா ராமலிங்கஜோதி, 5 -வது வார்டு அஞ்சலை கோவிந்தன், 6-வது வார்டு சாந்தி ராமதாஸ், 7-வது வார்டு ஏசு ரட்சகர், 8-வது வார்டு சென்னம்மாள் அண்ணாதுரை, 9-வது வார்டு பன்னீர்செல்வம், 10-வது வார்டு அஞ்சலை சத்யசீலன், 11-வது வார்டு சுசிலா விஜயன், 12-வது வார்டு மணிகண்டன், 13-வது வார்டு குமார், 14-வது வார்டு சங்கீதா பழனிச்சாமி, 15-வது வார்டு உஷா ஜோதிநாதன், 16-வது வார்டு கன்னியம்மாள் காசி வேல், 17-வது வார்டு ஜீவரேகா அண்ணாமலை, 18-வது வார்டு சீனுவாசன், 19-வது வார்டு செல்வி ராஜாக்கண்ணு, 20-வது வார்டு முனியம்மாள் குப்புசாமி, 21-வது வார்டு ஆனந்தராஜ், 22-வது வார்டு சுசிலா பாண்டுரங்கன், 23-வது வார்டு கெங்காசலம், 24-வது வார்டு வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன், 25-வது வார்டு சோலையம்மாள் ஏழுமலை ஆகியோர் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், நாராயணசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலூர் ஒன்றியம்
திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 23 ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 20 பேர் தி.மு.க.வை சேர்ந்தவர்களும், இரண்டு பேர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களும் ஒரு சுயேச்சை வெற்றி வெற்றி பெற்றனர். இவர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி சந்தைப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேச்சல் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
இதில் கவுன்சிலர்கள் அலமேலு, சுகவனராஜன், பார்த்தசாரதி, சாந்தி, பாண்டியன், சரஸ்வதி, அஞ்சலாட்சி, தணிகாசலம், சுமதி, பூங்கோல், ஜெயபிரகலாதன், சரளா, அருள்மொழிவர்மன், குமாரி, ஞானாம்பாள், மல்லிகா, சண்முகம், ஞானவேல், அபிராமி, பூங்காவனம், பழனியம்மாள், தனம், முத்துலிங்கம் ஆகியோர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளருமான ராமதாஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் துரைமுருகன், மேலாளர் நாராயணசாமி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முகையூர் ஒன்றியம்
விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றிபெற்ற ஒன்றிய வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா மணம்பூண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஞான சீனிவாசன் தலைமை தாங்கினார். கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சாம்ராஜ் வரவேற்றார். அரகண்டநல்லூர் போலீஸ் நிலைய துணை போலீஸ் சூப்பிரண்டு(பயிற்சி) நமச்சிவாயம் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் கவுன்சிலர்கள் செந்தில்குமார், ரேவதி, சூரியகலா, முத்தம்மாள், சிவமணி, மீனாகுமாரி, குப்புசாமி, மணிகண்டன், விருத்தம்பாள், ராஜராஜேஸ்வரி, தனலட்சுமி, பராசக்தி, சுந்தரி, அனிதா, மணிவண்ணன், கற்பகம், சேகர், பூபாலன், ஜூலியத்மேரி, சிவா, முத்துகிருஷ்ணன், செந்தாமரை, சத்யராஜ் ஆகியோர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும் மற்றும் ஊராட்சிகளின் உதவி இயக்குனருமான ஜெய்சங்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முடிவில் அலுவலக மேலாளர் கண்ணதாசன் நன்றி கூறினார்.
சங்கராபுரம் ஒன்றியம்
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 24 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி சங்கராபுரம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 1-வது வார்டு கவுன்சிலர் பீர்முகமது முதலில் பதவிபிரமாணம் எடுத்துக்கொண்டார். இவரை தொடர்ந்து 2-வது வார்டு அஞ்சலை, 3-வது வார்டு தமிழரசி, 4-வது வார்டு செல்வி, 5-வது வார்டு விமலா, 6-வது வார்டு அபுபக்கர், 7-வது வார்டு சரிதா, 8-வது வார்டு சுப்பிரமணியன், 9-வது வார்டு ரீனா, 10-வது வார்டு பரிமளா, 11-வது வார்டு சசிகுமார், 12-வது வார்டு தெய்வானை, 13-வது வார்டு சரோஜா, 14-வது வார்டு சாந்தி, 15-வது வார்டு ராஜா, 16-வது வார்டு அம்பிகா, 17-வது வார்டு பொன்னி, 18-வது வார்டு குமாரி, 19-வது வார்டு திலகவதி, 20-வது வார்டு தனவேல், 21-வது வார்டு கொளஞ்சி, 22-வது வார்டு ஆரோக்கிய மார்ஷல், 23-வது வார்டு நிஷாந்தி, 24-வது வார்டு பூங்கொடி ஆகியோர் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ரெத்தினமாலா, ராஜேந்திரன், ரவிச்சந்திரன் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகநாதன், கொளஞ்சிவேலு, ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகம், அசோக்குமார் ஆகியோர் இருந்தனர்.