கன்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வியாபாரி பலி
சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் வியாபாரி பலியானார்.
திருவலம்
சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் வியாபாரி பலியானார்.
திருவலம் அருகே உள்ள முத்தரசிகுப்பத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை (வயது 60), எலுமிச்சை பழ வியாபாரி. இவர் நேற்று காலை முத்தரசிகுப்பத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் திருவலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருவலம் அடுத்த இ.பி கூட்ரோடு அருகே வரும்போது, அங்கு சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரியின் மீது, சின்னதுரை ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி மோதியது. இதில் படுகாயம் அடைந்த சின்னதுரை வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.