நெல்லித்தோப்பு சிக்னலில் மீனவ பெண்கள் திடீர் சாலைமறியல்

நெல்லித்தோப்பு சிக்னலில் மீனவ பெண்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2021-10-20 16:53 GMT
புதுச்சேரி, அக்.
புதுவை நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் ஒரு பகுதியாக மீன் மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. இங்கு மீனவ பெண்கள் ஏராளமானவர்கள் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அருகில் உள்ள புவன்கரே வீதியில் சிலர் மீன்கள் விற்பனை செய்து வருகின்றனர். அவர்களால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறி நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் மீன் விற்கும் பெண்கள் அங்குள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் நேற்று பிற்பகலில் சாலை அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்து சென்ற உருளையன்பேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்