உள்ளாட்சி தேர்தலில் சட்டப்படி இடஒதுக்கீடு

உள்ளாட்சி தேர்தலில் சட்டப்படி இடஒதுக்கீடு வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க.வினர் மனு அளித்தனர்.;

Update: 2021-10-20 16:51 GMT
புதுச்சேரி, அக்.
புதுவை மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், அசோக் பாபு மற்றும் நிர்வாகிகள் மாநில தேர்தல் ஆணையத்தின் சிறப்பு பணி அதிகாரி அர்ஜூன் ராமகிருஷ்ணனை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதை வரவேற்பதோடு அதிகார பரவலை முழுமையாக செயல்படுத்த விரும்புகிறோம். பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர், பட்டியல் இன பழங்குடியினருக்கு சட்டப்படி இடஒதுக்கீடு அளிக்கவில்லை என்று பா.ஜ.க. பலமுறை வலியுறுத்தி உள்ளது.
புதுவை நகராட்சி சட்டம் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து சட்டத்தின்படி இடஒதுக்கீடுகளை அளித்து அதன் அடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து நிருபர்களிடம் சாமிநாதன் கூறுகையில், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தியதால் தீபாவளி பண்டிகையின்போது அரசும், அரசியல் கட்சி தலைவர்களும் ஏழைகளுக்கு வழங்கக்கூடிய நலத்தி்ட்டங்களுக்கு தடை ஏற்படும் என்பதால் நடத்தை விதிகளை விலக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்