அமைச்சர் நமச்சிவாயத்துடன் ராணுவ அதிகாரிகள் சந்திப்பு
அமைச்சர் நமச்சிவாயத்தை ராணுவ அதிகாரிகள் சந்தித்து பேசினர்.
புதுச்சேரி, அக்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே 1971-ம் ஆண்டு நடந்த போரில் கலந்துகொண்ட ராணுவ வீரர்களை கவுரவுக்கும் விழா புதுச்சேரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் நமச்சிவாயத்தின் அலுவலகத்தில் நடந்தது.
தென் பிராந்திய ராணுவ தலைமையகத்து அதிகாரிகள் பிரிகேடியர் சிகா தமிழ் அமுதன், கர்னல் அனோஜ், கர்னல் ரவீந்திரன், முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் தலைவர் மோகன் ஆகியோர் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்துடன் விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.