கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லை அடுத்த குட்டியபட்டி பிரிவு பகுதியை சேர்ந்தவர் இப்ராகிம். கடந்த மாதம் 16-ந்தேதி இவரை, பேகம்பூர் யூசுப்பியா நகரை சேர்ந்த லத்தீப் மவுலானா (வயது 23), சேக் அப்துல்லா (20), காலித் (21), முகமது இர்பான் (21), முகமது ஆசிக் ஆகியோர் கத்தியால் குத்தி படுகொலை செய்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து லத்தீப் மவுலானா உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் லத்தீப் மவுலானா, சேக் அப்துல்லா, காலித், முகமது இர்பான் ஆகியோர் மீது பல்வேறு இடங்களில் கொலை குற்ற செயல்களில் ஈடுபட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்கும்படி மாவட்ட கலெக்டர் விசாகனிடம், போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.