கிருஷ்ணகிரியில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு
கிருஷ்ணகிரியில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருடப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 28). கடந்த 15-ந் தேதி முருகன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர்கள் உள்ளே சென்றபோது, அங்கு பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.