சேறும் சகதியுமான சாலை
திருப்பூர் குறிஞ்சிநகரில் சேறும் சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
திருப்பூர்
திருப்பூர் குறிஞ்சிநகரில் சேறும் சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
சேறும்-சகதியுமான சாலை
திருப்பூர் குறிஞ்சிநகர் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இதுதவிர வடமாநில தொழிலாளர்கள் பலரும் அந்த பகுதிகளில் வசித்து வருகிறார்கள். தினமும் வேலை தொடர்பாக குறிஞ்சிநகர் வழியாக பலரும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறார்கள்.
குறிஞ்சி நகரில் பல ஆண்டுகளாக தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. மாறாக மண் சாலையே அந்த பகுதியில் இருந்து வருகிறது. இந்நிலையில் மழைக்காலங்களில் இந்த சாலை சேறும்-சகதியுமாக இருக்கிறது. இந்த சாலையில் வாகனங்கள் கடும் சிரமத்துடன் செல்லும் நிலை உள்ளது.
சாக்கடை கால்வாய்
இந்த சாலையோரம் சாக்கடை கால்வாய் ஒன்று உள்ளது. இந்த சாக்கடை கால்வாயில் பலரும் குப்பைகளை கொட்டிவைத்துள்ளனர். இதனால் சாக்கடை கால்வாயில் முறையாக கழிவுநீர் செல்வதில்லை. குறிப்பாக மழைக்காலங்களில் சாக்கடை கழிவுநீரும் மண்சாலையில் தேங்கம் அவல நிலை உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் ஆய்வு செய்து தார்ச்சாலை அமைக்க வேண்டும். இதுபோல் சாக்கடை கால்வாயில் உள்ள குப்பைகளை தூர்வாறி சாக்கடை கழிவுநீர் சிரமமின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-------