உடுமலை,
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச்சேர்ந்த விவசாயிகள் உடுமலையில், எலையமுத்தூர் சாலையில் உள்ள ஆர். டி.ஓ.அலுவலகத்திற்கு வந்து ஆர்.டி.ஓ.கீதாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.அந்த மனுவில் விவசாயிகள் ஒரு தனியார் நிறுவனத்தில் பாகற்காய், பீர்க்கங்காய், புடலைக்காய் போன்ற காய்கறி விதைகளை வாங்கி சாகுபடி செய்துள்ளார்கள்.இந்த விதைகள் தரமற்றதாக இருந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களது கடனை தள்ளுபடி செய்ய வழிவகை செய்ய வேண்டும். தரமற்ற விதையை வழங்கிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறப்பட்டிருந்தது.அத்துடன் விவசாயிகள் தங்களது நிலத்தில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டது என்றும் தனித்தனி மனுக்களை கொடுத்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ.இதுகுறித்து விசாரிப்பதாகத்தெரிவித்தார்.