மிலாடி நபியன்று மது, சாராயம் விற்ற 42 பேர் கைது

மது, சாராயம் விற்ற 42 பேர் கைது;

Update:2021-10-20 17:23 IST
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மிலாடிநபி அன்று விடுமுறை விடப்பட்டது. அதையொட்டி வெளிமார்க்கெட்டில் மது மற்றும் சாராய விற்பனையை தடுக்கவும், பிறமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வருவதை தடுத்து பறிமுதல் செய்யவும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டார்.

அதன்பேரில் வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் மதுவிலக்கு போலீசார், சட்டம்-ஒழுங்கு போலீசார் மாவட்டம் முழுவதும் மது, சாராய விற்பனையை தடுக்க தீவிர ரோந்து பணி, வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மது, சாராயம் விற்ற 9 பெண்கள் உள்பட 42 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 283 லிட்டர் சாராயம், 1,091 மதுபாட்டில்கள், ஒரு மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்