எரியாத மின் விளக்கு

எரியாத மின் விளக்கு

Update: 2021-10-19 21:34 GMT
தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூர் அருகே முதல்சேத்தி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தெரு விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவது இல்லை. இதனால் இரவில் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். விஷ பூச்சிகளும் அருகில் உள்ள வீடுகளுக்குள் சென்று விடுகின்றன. இதுபற்றி பலமுறை மின் வாரிய அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் மின் விளக்குகள் எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முதல்சேத்தி, கிராம மக்கள்.

மேலும் செய்திகள்