கரும்பு தோட்டத்தில் 50 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கரும்பு தோட்டத்தில் போடப்பட்டிருந்த 50 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
மங்களமேடு:
சாராய ஊறல்
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்த காருகுடி கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் சாராய ஊறல் போடப்பட்டுள்ளதாக மங்களமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டவர் தலைமையில் போலீசார் காருகுடி கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மருதை என்பவருக்கு சொந்தமான கரும்பு வயலில் 2 பெரிய பானைகளில் மொத்தம் 50 லிட்டர் சாராய ஊறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தந்தை- மகன் மீது வழக்கு
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே ஊரை சேர்ந்த வேலு, அவரது மகன் மருதை ஆகியோர் சாராய ஊறல் போட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராய ஊழலை அழித்த போலீசார், வேலு மற்றும் மருதை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.