தினத்தந்தி புகார் பெட்டி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-10-19 19:57 GMT
திருச்சி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை 30ஏ-வது வார்டு  மிலிட்ரி காலனி 8-வது தெருவில் இருந்து ராஜுவ்காந்தி நகர், இந்திராகாந்தி நகர் மற்றும் விவேகானந்தா நகர் பகுதிக்கு செல்லும் பிரதான சாலையோரத்தில் உள்ள  பாதாள சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்துள்ளதாக தினத்தந்தி புகார் பெட்டி பக்கத்தில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலில் தேங்கி நின்ற பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 
பொதுமக்கள், மேலகல்கண்டார் கோட்டை, திருச்சி. 

பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டி
பெரம்பலூர் மாவட்டம், வைத்தியநாதபுரம்  கிராமத்தில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் துண்கள் பழுதடைந்துள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வைத்தியநாதபுரம், பெரம்பலூர். 

ஆங்கில ஆசிரியர் இல்லாத மேல்நிலைபள்ளி 
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், வாணதிரையான்பட்டினம் பஞ்சாயத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11, 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ஆங்கில பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை. இதனால் மாணவ- மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கொளஞ்சிநாதன், வாணதிரையான்பட்டினம், அரியலூர்.

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்
புதுக்கோட்டை மாவட்டம்,  மணமேல்குடி தாலுகா, வெட்டிவயல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குமரப்பன்வயல் கிராமத்தில்  உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து கடற்கரை செல்லும் சாலையின் ஓரத்தில் மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த   மின்கம்பம் மிகவும் பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து  எலும்புக்கூடு போன்று காட்சி அளிக்கிறது.  பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் எப்போது வேண்டுமானாலும் இந்த மின் கம்பம்  முறிந்து விழுந்து உயிர் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், குமரபன்வயல், புதுக்கோட்டை. 

கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படுமா? 
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், தென்னிலையில் முறையான வடிகால் வசதி இல்லாததால்  4 ரோடு சந்திப்பு அருகே மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதேபோல் 4 ரோடு சந்திப்பிலிருந்து  வடக்கே கொடுமுடி செல்லும் வழியில் 50 மீட்டர் தொலைவில் உள்ள
 தேவேந்திர லிங்கேஸ்வரர் கோவில் முன்புறம் தார் சாலை மிகவும் சிதைவடைந்து மழைநீர் குளம்போல் தேங்கி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சிவசுப்ரமணியன், தென்னிலை, கரூர். 

அரசு பஸ் இயக்க வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், லெம்பலக்குடிக்கு புதுக்கோட்டையில் இருந்து 2 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அரசு பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், லெம்பலக்குடி, புதுக்கோட்டை. 

குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சி மாவட்டம், பிச்சாண்டார்கோவில் ஊராட்சி மாருதிநகர், செல்லத்தமிழ்நகர், கோகுலம் காலனி ஆகிய பகுதிகளில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் குப்பை மேடுகளாக மாறி வருகின்றன. மேலும் இதனை பன்றிகள், நாய்கள் கிளறுவதினால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பால்ராஜ், செல்லத்தமிழ்நகர், திருச்சி. 
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம் சேங்கல் பஸ் நிலையத்தின் அருகே குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் மழைபெய்யும்போது அதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சிவசக்தி, சேங்கல், கரூர். 

பராமரிக்கப்படாமல் உள்ள ஈஸ்வரன் கோவில் 
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரை அடுத்த ராசிபுரத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த  ஸ்ரீ ஈஸ்வரன்  கோவில் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பராமரிக்கப்படாமல் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்து பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
நிரஞ்சன், ராசிபுரம், புதுக்கோட்டை. 

கீழேவிழும் நிலையில் சிக்னல் கம்பம் 
திருச்சி ஓயாமாரி பாலம்  வழியாக ஸ்ரீரங்கம் காவிரி  பாலம் செல்லும் வழியில் சிக்னல் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிக்னல் கம்பத்தில் கார் ஒன்று  மோதி  சிக்னல் கம்பம் சற்று சாய்ந்து இருக்கிறது.  சாலையில் போக்குவரத்து நடைபெறும்போது சிக்னல் கம்பம் கீழே விழுந்தால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருச்சி. 

பயனற்ற அடிபம்பு 
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோடு கீதாபுரத்தில் அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அடிபம்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அடிபம்பு தற்போது பயனற்று காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயனற்று கிடக்கும் அடிபம்பை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சரவணன், ஸ்ரீரங்கம், திருச்சி.

குரங்குகளால் தொல்லை
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை அடுத்த திருவெள்ளறையில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம்  அமைந்துள்ளது.  கடந்த மூன்று மாதங்களாக புலிவலத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட குரங்குகள் இப்பகுதியில் வந்து தஞ்சம் அடைந்துள்ளன. இந்த குரங்குகள் அவ்வப்போது வீடுகளில் வைக்கப்படும் தின்பண்டங்கள், மளிகை பொருட்களை எடுத்து சென்று விடுகின்றன. மேலும் குழந்தைகளை கடிக்க வருவது போல் பயமுறுத்துவதால் குழந்தைகள் விளையாட கூட முடியவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
கோபிநாத், திருவெள்ளரை, திருச்சி. 

குண்டும், குழியுமான தார் சாலை 
திருச்சி மாவட்டம் தொட்டியம்,தொட்டியம்-திருஈங்கோய்மலை வரை உள்ள திருச்சி-சேலம் நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ரவிக்குமார், தொட்டியம், திருச்சி. 

பஸ் வசதி ஏற்படுத்தப்படுமா? 
திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம் அயன் புதுப்பட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு சாலை வசதி இருந்து பஸ் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். சுதாகர், கல்லுப்பட்டி, திருச்சி. 

சாலையில் செல்லும் கழிவுநீர் 
திருச்சி 49-வது வார்டு ஆழ்வார்தோப்பு பகுதியில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, அவற்றின் மூடி வழியாக கடந்த 15 நாட்களாக கழிவுநீர் வெளியேறி சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன்  நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சித்திக்,  ஆழ்வார்தோப்பு, திருச்சி. 

மேலும் செய்திகள்