மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் 2 பேர் சாவு
வாலாஜா அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.;
வாலாஜா
வாலாஜா அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியை அடுத்த களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 55), விவசாயி.
வாலாஜாவை அடுத்த வள்ளுவம்பாக்கம் கிராம பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கனகவள்ளி (50). இருவரும் உறவினர்கள். நேற்று முன்தினம் பரசுராமனும், கனகவள்ளியும் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.
வாலாஜா அருகே உள்ள நரசிங்கபுரம் கூட்ரோட்டில் வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
2 பேர் சாவு
உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கனகவள்ளி பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து பரசுராமன் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரசுராமன் உயிரிழந்தார்.
இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.