ஊத்தங்கரை அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் பலி
ஊத்தங்கரை அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் பலியானான்.
கல்லாவி:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. கிணறு வெட்டும் தொழிலாளி.. இவரது மகன் சக்திவேல் (வயது 13). இவர்கள் குடும்பத்துடன், ஊத்தங்கரையில் திருப்பத்தூர் செல்லும் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் பின்புறம், தற்காலிக குடிசை அமைத்து வசித்து வருகிறார்கள். நேற்று காலை தனது தாயுடன் ஏரியில் துணி துவைக்க சென்ற சிறுவன் சக்திவேல் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினான். அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.