முதியவர் பலி

அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.;

Update: 2021-10-19 17:04 GMT
சிங்கம்புணரி, 
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காவல் நிலையம் அருகே உள்ள சோதனைச்சாவடி முன்பு அரசு பஸ் மீது சிங்கம்புணரியில் இருந்து காவல் நிலையம் வழியாக சொக்கலிங்கபுரம் சாலை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த முதியவர் படுகாயம் அடைந்து  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவர் யார் எந்த ஊர் என்ற விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்