மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
மானாமதுரை,
மானாமதுரை பகுதியில் வைகை ஆற்றை ஒட்டி கல்குறிச்சி, எம். கரிசல்குளம், பூக்குளம், வேதியரேந்தல், கீழப் பசலை, கால்பிரபு ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் மண் அள்ளும் எந்திரங்கள் மூலம் டிப்பர் லாரிகளில் மணல் கடத்துவது சம்பந்தமாகவும், கடந்த சில மாதங்களாக கல்குறிச்சி, பூக்குளம், செங்கோட்டை கால்பிரபு, வேதிய ரேந்தல் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் திருடர்கள் மினி வேன்கள் மற்றும் சாக்குமூடையில் தலைச் சுமையாக மணலை கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மானாமதுரை சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் உதயக்குமார், போலீசார் ராஜேஷ், கோபால கிருஷ்ணன் ஆகியோர் செங்கோட்டை பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு டிராக்டரில் மணல் திருடிக்கொண்டு வந்தவர்கள் போலீசாரை கண்டவுடன் டிராக்டரை விட்டு விட்டு ஓடினர்.இதையடுத்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து மணல் திருட்டில் ஈடுபட்ட வர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.