திண்டுக்கல், சின்னாளப்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

திண்டுக்கல், சின்னாளப்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2021-10-19 16:51 GMT
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் பொன்னகரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திண்டுக்கல் புறநகர் பகுதிகளான பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழைக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ.காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளியபட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று திண்டுக்கல் தெற்கு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.
இதேபோல் சின்னாளப்பட்டி அருகே உள்ள கீழக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெறுகிறது. இதையொட்டி காந்திகிராமம், கோட்டைப்பட்டி, சின்னாளப்பட்டி, அம்பாத்துரை, செட்டியப்பட்டி, எல்லைப்பட்டி, கல்லுப்பட்டி, வலையபட்டி, வேளாங்கண்ணிபுரம், சிறுமலை, பெருமாள்கோவில்பட்டி, முருகம்பட்டி, ஜாதிகவுண்டம்பட்டி, சாமியார்பட்டி, அ.வெள்ளோடு, ஆலமரத்துப்பட்டி, பிள்ளையார்நத்தம், பஞ்சம்பட்டி, கலிக்கம்பட்டி, முன்னிலைகோட்டை, போக்குவரத்துநகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று சின்னாளப்பட்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்