திண்டுக்கல் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை

திண்டுக்கல் அருகே குடும்ப பிரச்சினையால் விரக்தியடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-10-19 16:47 GMT
கோபால்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள புகையிலைப்பட்டியை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 26). விவசாயி. அவருடைய மனைவி ஜெயமேரி (22). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 
இந்தநிலையில் வின்சென்ட் வீட்டில் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்த அவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 
அங்கு சிகிச்சை பலனின்றி வின்சென்ட் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்