தர்மபுரியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2021-10-19 22:16 IST
தர்மபுரி:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் தர்மபுரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். கொரோனா தொற்று கால பொருளாதார பாதிப்பை கருத்தில் கொண்டு சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு போனஸ் தொகையை 25 சதவீதமாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்