பக்தர்கள் புடைசூழ பூஞ்சோலையை அடைந்த அகரம் முத்தாலம்மன்

அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலையை சென்றடைந்தார்.

Update: 2021-10-19 16:44 GMT
தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் கண் திறப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி அன்றையதினம் கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். அதன்பிறகு நள்ளிரவில் கொலு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, வான காட்சி மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார். 
இந்தநிலையில் நேற்று காலை 6 மணி அளவில் வான காட்சி மண்டபத்தில் இருந்து, சொருகு பட்டை சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். அதன்பிறகு பக்தர்கள் புடை சூழ புறப்பட்டு அம்மன் பூஞ்சோலையை சென்றடைந்ததுடன் திருவிழா நிறைவு பெற்றது.

மேலும் செய்திகள்