பாலிடெக்னிக் மாணவனுக்கு டெங்கு காய்ச்சல்

படவேடு கேசவபுரம் கிராமத்தில் பாலிெடக்னிக் மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-10-19 15:51 GMT
கண்ணமங்கலம்

படவேடு கேசவபுரம் கிராமத்தில் பாலிெடக்னிக் மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. 

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு கேசவபுரம் பகுதியை சேர்ந்தவர் 18 வயது மாணவன். 

இவர், சென்னையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

அங்கு அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் என தெரியவந்தது. தற்போது சிகிச்சை முடிந்து கேசவபுரம் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் மாணவர் தங்கியுள்ளார்.

இதையடுத்து டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க கிராமம் முழுவதும் படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் தலைமையில் கொசு ஒழிப்பு மருந்து அடிக்கப்பட்டது. 

மேலும் திருவண்ணாமலை உதவி பூச்சியியல் ஆய்வாளர் கணபதி, வட்டார மேற்பார்வையாளர் ஜெயசீலன், மருத்துவமில்லா வட்டார மேற்பார்வையாளர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் ராமு, தமிழரசன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு தேவையில்லாத இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தி, கொசுப்புழுக்கள் ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்